31 October, 2008

அழகிய பொய்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த தளத்தில் என் உள்ளத்தின் எண்ணத்தை பதிக்கிறேன்.

நான் விறும்பும் வாழ்க்கை வாழ வழி தேடி அலைந்துகொண்டு இருக்கிறேன்.
பகல் இரவு பாராமல் கணினியில் களைந்து போன என்னை இன்று
பொய் என்னும் கலை புத்துயிர் ஊட்டி புது நம்பிக்கை பகிர்ந்தது.

பெரும்பாளான அறிஞர்களின் கூற்று

"பொய்மையை கண்களே அறியும்" என்பதை நம்பினேன்,

உன் உச்சரிப்பை கொண்டு உன் உள்ளம் உரைப்பதை உணர்ந்த
என் உள்ளத்தை எண்ணி வியக்கிறேனடி இப்போது.
நம்ம டி ஆர் ரேஞ்சுல சொல்லனும்னா
உன் பொய்யால் நான் புன்னகிக்கிறேன்
அது மெய்யாக இறைவனிடம் வின்னப்பிக்றேன்.

பொய்கள் உரைத்த தோழியே இந்த வண்ண கிறுக்கலின் காரணம்.

04 October, 2008

kirukkalgal

கவிதை சொல்ல முயன்றேன்

உணர்வுகள் வார்த்தையாக மறுத்தது

ஏன் இந்த வறுமை என்று வார்த்தைகள் தேடினேன்

வார்த்தைகளின் வறுமை வரட்சியானது.. வானம் பாலைவனமானது..

என் வசந்த காலம் வார்த்தைகளில் இல்லையடி பெண்ணே..

நீ சிரித்தால் என் கிறுக்கலும் கவிதை ஆகுமடி.