31 October, 2008

அழகிய பொய்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த தளத்தில் என் உள்ளத்தின் எண்ணத்தை பதிக்கிறேன்.

நான் விறும்பும் வாழ்க்கை வாழ வழி தேடி அலைந்துகொண்டு இருக்கிறேன்.
பகல் இரவு பாராமல் கணினியில் களைந்து போன என்னை இன்று
பொய் என்னும் கலை புத்துயிர் ஊட்டி புது நம்பிக்கை பகிர்ந்தது.

பெரும்பாளான அறிஞர்களின் கூற்று

"பொய்மையை கண்களே அறியும்" என்பதை நம்பினேன்,

உன் உச்சரிப்பை கொண்டு உன் உள்ளம் உரைப்பதை உணர்ந்த
என் உள்ளத்தை எண்ணி வியக்கிறேனடி இப்போது.
நம்ம டி ஆர் ரேஞ்சுல சொல்லனும்னா
உன் பொய்யால் நான் புன்னகிக்கிறேன்
அது மெய்யாக இறைவனிடம் வின்னப்பிக்றேன்.

பொய்கள் உரைத்த தோழியே இந்த வண்ண கிறுக்கலின் காரணம்.

04 October, 2008

kirukkalgal

கவிதை சொல்ல முயன்றேன்

உணர்வுகள் வார்த்தையாக மறுத்தது

ஏன் இந்த வறுமை என்று வார்த்தைகள் தேடினேன்

வார்த்தைகளின் வறுமை வரட்சியானது.. வானம் பாலைவனமானது..

என் வசந்த காலம் வார்த்தைகளில் இல்லையடி பெண்ணே..

நீ சிரித்தால் என் கிறுக்கலும் கவிதை ஆகுமடி.

18 September, 2008

chinna chinna kirukkal

வானின் ஒற்றை நிலவை கண்டேன்..


அளவில்லா அழகுடன் மிதந்த ஜோதி


மனதில் எழுப்பிய முதல் ஒளி


உன்முகம் தான் அன்பே..

நீ இல்லாமல் முழு நிலவும் இருண்டதடி,


02 July, 2008

going green

As I planned early I am correcting myself.. only in a bitter rate.. :)

Daily to my work I used to travel from my place [Anakaputhur] to Pallavaram approx 4 kms using my 2 wheeler for comfort reasons.. Now I replaced my 2 wheeler with new AXN-DX bi-cycle for attacking two problems fitness and eco-friendly..

Motivations/Interests for new bi-cycle
fitness: My old photo album with friends and family.. Like many I too preferred to be slim and fit.. but because of my lazyness I put on some weight which really pulls of my confidence and comfort..
Hari advised us [me and mama] to jog or run daily.. I know its really hard for me to wake up early and do such good things.. I enjoyed cycling so I convinced myself to go for cycling on daily basis for solving the problem..

Eco-friendly: Green peace members visited our company 2 weeks back and made some presentation on our contributions to global warming or climate change or pollution.. whatever worst things that happening related with CO2 emission..
Those are facts that mentioned I am also part of the group which is spoiling the world while seeking comfort for themselves..



Our actions may not solve the problem completely but we have do what we can.. lets join hands together to fight against our own comfort attitudes..

14 June, 2008

back to chennai

I am back from US to india on june 2nd. It was a short term trip to US and it was really wonderful. as you all know when you are with your family and friendz you will always be busy making yourself available for them. :)

The original plan of my trip was a long term one, since my project was scrapped I was called back to my base branch Chennai. There is small chance that I may travel back after 3 or 4 months, but It may not happen as I was the one who was identified as SPOC [single point of contact] for the team over here formed newly for ING and Citistreet merger preperations, composed of 8 real masters currently. I was really added up with resposibilities that I was dreaming.

I like to post more frequently, but I am not able to do so. Since I am in chennai I am able to be in touch with many of my friends, frequent calls and seldom visits makes my life busy than the calm and lonely life in US.

As many others I am also not organised, I am planning for organinsing things better in my life. so I am starting with the things that requires some pre-requisites which I already have. so will update you all on what I tried and what I acheived byAugust 15th.

have a gud day.

12 May, 2008

கனவுப்பெண்

பெண்களின் அழகுக்கு அளவுக்கோல் இல்லை என்பர்
என்னவளின் அழகை காணாதோர்.

10 May, 2008

சினிமா

அன்பு, ஆனந்தம், ஆக்ரோஷம்,

காதல், காவியம், கனவு ஆகிய அனைத்தையும் கதையாக சொல்லும் சினிமா இன்றைய அறிவியல் உலகத்திலும் ஆரோக்யமாக இருக்கிறது என்பது எதார்த்தம்.

நான் அதிகமாக என் நேரத்தை வீனக்குவது இந்த வீணாப்போன சினிமாவால்தான். எனக்கு காதல், அதிரடி, காமெடி மற்றும் விஞ்ஞான ரீதியான படங்கள் ரொம்ப இஷ்டம். நான் மட்டுமல்ல எல்லாருக்கும் இஷ்டம் என்பதால் தான் இந்த நான்கில் ஒன்றாவது திரைப்படத்தின் கருவாக வைக்கப்பட்டுள்ளது.

நம் நிஜ வாழ்வில் நடப்பதை.. இல்லை நடக்கும் என்று நம்புவதை.. உரு கொடுத்து.. வண்ணம் பூசி, வாசம் தூவி, சீவி சிங்காரித்து ஒரு கலவையாக்கி அதற்க்கும் மெருகேற்றி அழகுபடுத்தி.. நமக்கு படைக்கிறார்கள்..கழுதை போன்ற நம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அலங்கரித்து பட்டத்து குதிரையாக தொற்றுவிக்கிறார்கள்.

நம் கனவுகள் நம் முன்னால் தொகை விரித்து ஆடும் அழகை பார்ப்பது விந்தை இல்லை எதார்த்தம் தான். இசையை விருந்தாக கொண்ட படங்கள் பல நம் நெஞ்சை கொல்லையடித்திருக்கும். ரஹ்மான் கோடி கோடி ரசிகர்கள் கொண்டான் அவன் இசை கொண்ட வசையால்.

சமிப காலமாக நான் மிகவும் விரும்பி பார்ப்பது

காதலன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள்,

நாயகி நாயகன் மீது காதல் வசப்படும்போது,

நாயகன் நாயகி காதல் வெல்ல சூழ்நிலைகள் உதவும் கட்சிகள்..

இதை எல்லாம் பெருமூச்சு விட்டு பார்க்கிறேன்.. இதிலெல்லாம் நான் என் நிஜ வாழ்வில் தோற்றது, இழந்தது.. என் காதல் கதை சொல்ல ஆசை தான் என்ன செய்ய என் காதல் நிஜமானதால் மலரும் நினைவுகள் சில கசப்பான சம்பவங்கள் பல..

காமெடியன் அடி வாங்கன சிரிப்பது, ஹீரோ அடி வாங்கன பீல் பண்ணுவது.. இதுக்கெல்லாம் என்ன காரணம்.. நம்மள ஹீரோவாவும்.. ஜாலியா இருக்கற நண்பர்கள காமெடியனாகவும் நினைக்கறதுதான்.. நிஜம் என்னன்னா யாரு அடி வாங்கினாலும் நாம பரிதாப படுவோம்.. ஆனா கதைல அடி வாங்கறத காமெடிய எடுத்துக்குறோம்.. இது போதுமே நிஜத்தையும் நிழலையும் பிரித்து காட்ட.. இது எத்தனை பேருக்கு பொருந்தும்னு தெரியல..

என்னக்கு பிடித்த சில பாடல்கள்/கட்சிகள் சில கீழே






நன்றி

05 May, 2008

தேவதையின் சாபம் - 1

ராஜா மொகைதீன் என்கிற ராஜா தனது இருபத்தி மூன்று வருடங்களையும் சென்னையில் மட்டுமே கழித்தவன். எந்த பெரிய கடமைகளும் இல்லாதவன் போல் தெரிந்தாலும் எல்லா தலை பிள்ளைக்கும் இருக்கும் பொறுப்பு இவனுக்கும் இருந்தது. தான் ஒரு சராசரி குடும்பத்தை செர்ந்தவனாலும்
தன்னை ராஜகுமரனாக பார்க்கும் பெற்றோர், தளபதியாக பார்க்கும் நண்பர்கள் என உண்மையான ராஜாவாக வளர்ந்துவந்தான். இந்த ராஜாவுக்கு வணவாசமாக பெங்களூரில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

சொல்லப்போனால் நம்மைபோல ஒருவன் :)

கனவு உலகத்தில் வாழும் இவன்னுக்கு நெரிசலான சென்னையும் பெயருக்கு ஏற்ற மாதிரி சிங்கார சென்னையாக தெரிந்தது.. உலகத்தை வெல்ல புறப்படும் போர் விரன்போல் சந்தோசமும் கவலையுமாக பெங்களூருக்கு புறப்பட்டான் நம் ராஜா.

கயல்விழி என்கிற கயல்.. சென்னை வாசித்தான் அனால் "Chennai is a dirty place" அப்படின்னு பிலிம் ஓட்டுவ.. காரணம் அவளின் உறவினர்களும்.. அவள்களின் கலாச்சாரமும்.. ரொம்ப ரொம்ப ஆச்சாரம் பார்பவர்கள்.. வேறு மத மக்களிடம் பேசுவதை கூட யோசிப்பவர்கள்.. :( [இப்படியும் பலர் இருக்கிறர்கள்]

சென்னையில் அப்பா அம்மா உறவியானர்களை விட்டு பள்ளி படிப்பை ஊட்டியிலும், கல்லூரி படிப்பை கோயம்புத்துர்ரிலும் நிறைவேற்றினால்..
பெங்களூரை சேர்ந்த ஒரு நல்ல கம்பெனியில் விரும்பிய வேலையையும் பெற்றால். தங்களுடன் இல்லாததால் அவள் குடும்பத்தில் எல்லாரும் கயல்விழிமீது மிகவும் நேசம் / பாசம் காட்டினர்.. குடும்பத்தின் பாச மழையில் நினைந்தவன்னம் பெங்களூருக்கு புறப்பட்டால் கயலும்..

தன் நண்பர்களில் அறிவுரையும், அந்த வயதுக்கே உரிதன ஆசைகளுடன் இவன் பயணம் தொடர்ந்தது..
தான் விரும்பிய வேலை, தான் விரும்பிய வாழ்க்கை என மன நிம்மதியில் இவள் பயணம் தொடர்ந்தது..


முதல் அனுபவம் எல்லோருக்கு நிச்சயமாக ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.. [புதுசா இருப்பதால் தான் அதை முதல் அனுபாவம் என்கிறார்கள்]..
புதிதான சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள், ஏக்கங்கள் இவைகளுடன் வந்தவன் நண்பனின் நண்பன் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தான். ஓரிரு நாட்கள் முன்னதாக வந்தவனுக்கு வீட்டில் கால்கள் கட்டுப்படவில்லை. நகரை சுற்றிபர்க்க கிளம்பிவிட்டான்.. எம்.ஜி. ரோடு.. பெங்களூரில் மிக பெயர்போன இடம்.. முதல் முறை வருவதால் அங்கு உள்ள எல்லா கடைகளையும் சிறிது நேரம் நோட்டம் விட்டு உலாவந்தான்.. அப்படி வருகையில் ஒரு தென்றல் அவனை மட்டும் விரட்டியது.. அந்த தேவதையின் சிறகுகள் மெல்ல இவனை தழுவ இவன் முட்டும் வானில் மிதந்தான்.. தன்னை மறந்த அந்த வினாடியில் அந்த பெண்ணின் முகவரியும் தொலைத்தான்.


ஆயிரம் ஆயிரம் வண்ணங்களை கொண்டு பிரம்மாண்டமான ஓவியங்கள் நம் முன்னால் இருந்தாலும்..
சில வினாடிகள் தோன்றி மறையும் வானவில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது..
நாம் அந்த அழகை மறுமுறை காணும் வரை நீடிக்கும்..

இந்த வாரம் டிக்கெட்ஸ் [வேலை] சுலபமாக இருக்க வேண்டும் என்று வேண்டிய நண்பனுடன். அந்த பெண்ணை மறுமுறை நிச்சயமாக பார்போம் என்ற நம்பிக்கையில் ராஜாவும் வேலைக்கு புறப்பட்டான்.


****************************************************

நானும் வேலைக்கு போகணும்.. மிச்ச கற்பனைகள் முளைக்கும் பொது தொடர்வேன்.. நன்றிகளுடன்..

04 May, 2008

காதல் மழை

பூக்கள் பூத்து புன்னகிப்பது இயற்கையின் அழகு..
என்னவளின் இதழோரம் பூக்கும் புன்னகை
இயற்கைக்கே அழகு..


காதலித்தேன்
காலத்தை கடத்தினேன், அவள் தேன்விழிகளை பார்க்க..
அவளும் கடந்து சென்றால்
காத்திருந்த என் காலத்தோடு..


காதல் இரு உள்ளங்கள் இணைந்தது என்றால்.
எனக்காக ஒரு பெண்ணை காதலித்தேன்,
இது மெய்யானதா???


அவள் மீது கொண்ட காதலை சாரல் மழையாய் வெளிபடுதினேன்..
என் காதலை கண்டு வியந்தாள்..
வியந்தவள் சிலிர்க்கும் முன் சாதி எனும் கருப்பு குடையை தோன்றியது..
தன் ஆசையையும், காதலையும், கண்களையும் குடைக்குள் மறைத்தாள்..
நான் புயலாகாமல் இருந்தேன்..
அந்த தேவதை!!
என் காதலை உணராமல் எல்லைகளை கடந்துவிட்டால்..
இன்று நான் கண்ணீர் மழையில்.. புன்னகையுடன் அவளுக்காக..

03 May, 2008

செவிச் செல்வம்

வெள்ளி, இந்த பூமியின் எல்லா சந்தோசங்களையும் நான் முழுமையாக அனுபவிக்கும் சுதந்திரம் பிறக்கும் நாள்.. அந்த வாரத்தின் கம்பெனி வேலைகள் அனைத்தையும் மூட்டை கட்டும் நாள்.. மனம் தன் இஷ்டப்படி செயலாற்றும் நாள் இந்த பொன்னால் தான்..

இந்த வெள்ளி நான் கற்றது.. இல்லை நான் கற்றதை பதித்தது எனலாம்.. நாம் எல்லோரும் நம் நண்பர்களுடன் நீண்ட நேரம் நம்மை பற்றியே பேசிக்களிப்போம் .. இங்கு நாம் மணிக்கணக்கில் நம்மை பற்றியும், நம்
சுற்றத்தார்களை பற்றியும் தான் அதிகமாக பேசுவோம்..

என்னுடன் பணியாற்றுபவர் "TOTO".. நாங்கள் இது வரை எங்கள் வேலைக்கும் ஈடுபாடு இல்லாத எந்த விஷத்தையையும் பேசியது இல்லை.. கடுமையான வேலைகள் சற்று ஓய்ந்து இருந்ததால்.. கணினியின் கரைகளை தாண்டி நண்பர்களின் தீவில் சற்று இளைபாறினேன்.. என் செவிகள் அவர்களின் உள்ளுணர்வுகளை கைப்பற்றியது.. என் மரியாதைக்கு உரிய "TOTO".. நான் மிக அதிகமாக போற்றும் மனிதர்களில் ஒருவராக உயர்ந்தார்..

நான் இதுவரை என்னுடைய பார்வையில் மற்றவர்களை கணக்கிட்டேன்.. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன்.. நாம் சுயநலவாதிகள் தான்.. எப்போதும் எதிர்பர்த்துகொண்டு இருக்கிறோம்.. இப்போது கூட பாருங்கள் நான் என் பார்வையில் எல்லோரும் சுயனலவதிகள் என்கிறேன்.. இது நான் இதுவரை செய்த பிழை.. என்ன செய்ய இவை அனைத்தும் என் எண்ணத்தில் அழமாக உடுரிவியவை.. சல இல்லை பல நாட்கள் ஆகும் இத்தகைய பண்பட்ட விதிமுறைகளை மாற்றுவதற்கு.. நான் இன்றில் இருந்து முயற்சிக்கிறேன் மற்றவர்களின் எண்ணங்களை கேட்பதற்கும் உணர்வதற்கும்..

சற்று என் சரித்திரத்தை புரட்டினேன்.. நானும் சில நேரங்களில் என் சுற்றத்தாரின் உணர்வுகளுக்கு சற்றி செவி தாழ்த்தி இருக்கிறேன்.. அதனால் தான் என்னவோ பல நல்ல நண்பர்களும், சில அழகான உறவுகளும் எனக்கு வரமானதாக பெருமைகொள்கிறேன்.. அந்த சில தருணங்களை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டுகிறேன்..

இவை செல்வங்கள் அல்ல வரங்கள்.. மனிதனை மனிதனாக்கும் வரங்கள்.. வரமளித்தவனுக்கே எல்லா புகழும்..

23 April, 2008

என்னை பற்றி நான்

நான் யார் ??
என்னுடைய கடமைகள் என்ன??
என்னுடைய பலம் மற்றும் பலவீனம் என்ன ??
எதற்காக இங்கு இருக்கிறேன்??
என்னால் என்ன முடியும்??

இந்த கேள்விகள் எனக்கு மட்டும் பொதுவானது என்றால் - இல்லை.. இந்த கேள்விகள் நாம் ஒவ்வொருவரும் விடை தேடுவோம்.. வெற்றி நம் பக்கம் இல்லாத போது.. இதுதான் நம் மனித இயல்பு என்று எண்ணுகிறேன்.. சரி சரி இது பொதுவான மனித இயல்பு என்று திருதிகொள்கிறேன்..

நான் சராசரி குடும்பத்தை சேர்த்தவன்.. அப்பா டெய்லர், சிறிய அளவில் துணி வியாபாரம் செய்துகொண்டு இருக்கிறார்.. அம்மா இல்லத்து அரசி மட்டும் அல்லாமல் அப்பாவின் வியாபாரத்துக்கும் உதவியாளர் பனி செய்துகொண்டு இருகிறாள்.. தம்பி ரிஸ்வான் "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்'' என்ற சொல்லுக்கு ஏற்றவன்..

இவர்கள் தான் என் வெற்றியின் தேடல்களுக்கு மூலகாரணம். இவர்கள் எனக்காக இருக்க நான் இவர்களுக்காக இந்த உலகை வெல்ல முயல்கிறேன். நான் மட்டுமா இந்த உலகமும் முழுவதும் அப்படி தான்.. இங்கு ஜகா வாங்க மாட்டேன்.. இது எல்லோருக்கும் பொருந்தும்.. இல்லை என்பவர்களை பெராததுதான் இந்த உலகம்.. இதுவே இந்த உலகத்தை சொர்க்கத்தில் இருந்து வேறுபடுத்துகிறது என்றால் அதுவும் பொருந்தும்..

வெற்றி என்பது பொதுவானது அல்ல.. இது ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பம், அசை, சூழல், முயற்சி, சமுதாயம், திறமை, வாய்ப்பு ஆகியவற்றை கொண்டு நிர்ணயக்கபடுகிறது எனலாம்.. உதாரணம் பல சொல்லலாம்..
முயற்சி ஒன்னு : விவேகானந்தர், அப்துல் கலாம், வாஜ் பாய் ஆகிய பிரம்மச்சாரிகள் கல்யாணம் அல்லது தாம்பத்ய வாழ்க்கை தங்களின் வெற்றி இல்லை என்றுருக்கலாம். இது எல்லோருக்கும் பொருந்தாது இல்லையா.. இவர்கள் வென்றவர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.. ஆனால் ஏன் நம் எல்லோரும் இந்த வெற்றியை தேர்ந்தேடுகவில்லை ?? காரணம் நம் விருபங்கள், ஆசைகள், சூழல்கள் இந்த வெற்றியை தேடவில்லை..
இந்த முயற்சியே போதும் என்று எனக்கு தோனுகிறது.. ஆதலால் மற்ற காரணக்களுக்கு எடுத்துகாட்டுகள் உங்கள் பாணியில் நீங்கள் சிந்திக்கவும்.. :)

வெற்றியின் அஷ்திவாரமாம் திறமையும் , பொறுமையும்.. இதற்கு நான் என் தாய் தந்தைக்கு கடமை பட்டுள்ளேன்.. இவைகள் இருந்தாலும் வெற்றியை தேடினால்தான் கிடைக்கும் என்பது மறுக்க முடியாதது.. அந்த பாதையை எனக்கு காட்டியவர்கள் என் நண்பர்கள்..

என் கல்லூரி காலம் முதல் இன்று வரை நான் என் வெற்றியில் என் நண்பர்களின் எண்ணங்களை பார்க்கிறேன்.. அவர்களின் சாயல்கள் என் செயல்களில் புலப்படும்.. நான் மிகவும் மதிக்கும் என் நண்பர்கள் (முன்மாதிரிகள் எனலாம்)
ஹரி மற்றும் முரளி. ஹரி என்கிற ஹரி நடராஜன். முரளி என்கிற முரளி ராமகிர்ஷ்ணன். நாங்கள் ஸ்ரீ முத்துகுமரன் இன்ச்டிடுடே ஒப் டெக்னாலஜி என்ற சென்னையை சேர்ந்த கல்லூரியில் கணினி பொறியியல் துறையில்
பயின்றோம்.. இன்ஜினியரிங் முடிந்ததும் நாங்கள் வேறு திசைகளில் சென்றோம்.. துரங்கள் மட்டுமே எங்களை பிரித்தது..

ஹரி, முரளி - என்னை சார்ந்த எல்லோரும் நிச்சயமாக இந்த பெயர்களை அறிந்திருப்பார்கள்.. எவர்கள் தான் என் செயல்கள், முயற்சிகள், எண்ணங்களின் ஆணி வேர்கள் எனலாம்..

இப்போது இவர்கள் பட்டியலில் செர்தவர்கள் சிலர்.. அவர்கள் என் கம்பெனியை சேர்ந்த கலீல், பிரபு மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகியோர்.. என் பாலிய நண்பனான வேங்கி என்கிற வெங்கடேஷ்..

என்னை பொறுத்த வரை நண்பர்கள் தான் நம் அளவுகோல்கள்.. நம்மை நாமாக பார்பவர்கள் தான் நண்பர்கள்.. இவர்கள் நிச்சயமாக நம்முடைய எல்லா செயல்களையும் கண்காணிப்பார்கள்.. இவர்கள் நம் தவறுகளையும், குறைகளையும், பிரச்சனைகளையும், தாழ்வு மனப்பான்மையும் திருத்தும் தேவ துதர்கள்.. கொஞ்சம் ஓவர் இருக்கு இல்ல சரி என்ன பண்ண இதெல்லாம் அரசில்யல்ல இருக்கணும் இல்லையா.. எல்லோரும் எல்லா நேரங்களிலும் வெளிபடைய இருக்க முடியாது.. நம் மனம் சில தருணங்களில் தான் தன் எல்லைகளை விட்டு பறந்து செல்லும்.. தன் ஆனந்தத்தின் எல்லைகளை தொடும் பொது சில உணர்வுகள் வார்த்தைகளாக வரும் அது போல் தான் இதுவும்.. உங்கள் உள்ளங்களை தட்டி பாருங்கள் உங்கள் எண்ணங்களின் நிழல்கள் தெரியலாம்..

நாம் அனைவரும் சல பல இர்புவிசை கொண்டவர்கள்.. சிலரிடம் நம் கருத்துகளையும், எண்ணங்களையும் பரிமாறி பின் அவர்களை நம் நண்பர்கள் என்று பட்டம் சூட்டுவோம்.. சிலர் சல சந்திப்புகலிலே நண்பர்கள் அந்தஸ்தை வென்று விடுவார்கள்.. எப்படியும் நட்பு என்னும் நம்பிக்கை நம் எண்ணங்களின் வேற்றுமையை வெல்லும் திறன் கொண்டது.

குருங்கலத்தில் நான் என் நட்பை பகிர்துகொண்டவர்கள் பலர்.. அதில் சிலர் மேகலை வாணி [SMIT], ஸ்வர்ண ரேகா [TCS] , ஜெர்ச விஜய லேகா [TCS] , நிஷா [TCS] , கியாதி சின்ஹா [TCS] .

நம்ம எண்ணங்களுடன் ஒற்று போகும் சிலரை எந்த விதிவிலக்கும் இன்றி நம் மனம் அவர்களை நம் நண்பர்களாய் நிர்ணயிக்கும். இப்படியும் பலர் பிரசாத் SSLC, மோகன் HSC, விஷ்ணு TCSING , அசோக் TCSING, ஹமீது TCSING , நிக்கில் TCSING , பிரஷாந்த் TCSING, காமாட்சி TCSING, ராஜேஷ் [TCSING] , ஜெகதீஸ் GENRE, மற்றும் பலர்....

மரியாதை நிமித்தமாக போற்றும் நண்பர்கள் பலர்.. இவர்களுக்கு முகவரிகள் அதிகம் வேண்டாம் என்றாலும் நம் கடமையை செய்யணும் இல்லையா.. பரணி தரன், தீபிகா , ரத்னா, சந்திரா, சாம், ஸ்ரீராம், கணேஷ், ஒமயுறு பாகன், செந்தில் குமார், கார்த்திகேயன், யாசர், ரேவதி, திவ்யா, ஸ்ரீஜா, பவானி, கார்த்தி, மோகன், விஜி மற்றும் பலர்.. :)

எனக்கு என்னோட எல்லா பிரெண்ட்ஸ் பெரும் சொல்லணும் அதுதான் சரியும் கூட.. அனா என்ன பண்ண இந்த பாலபோன டைம் சிலர, இல்ல பலர டக்குனு நியாபகத்துக்கு வர வெக்க மாட்டேங்குது.. நாளைக்கு யாராவது இத பாத்துட்டு ஏன்டா என்னோட பெயர போடளன பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.. அது உங்களுக்கும் தெரியும்.. இல்லையா..

சரி இப்போதைக்கு நான் என்னுடைய பகிர்வுகளை சற்று நிறுத்தி கொள்கிறேன்.. இந்த ப்ளேடு உங்களுக்கு சல நினைவுகளை நினைவூட்டும் என்று நம்புகிறேன்.. காலம் நமக்காக செய்த வன்னக்கோலம் என்றும் கலையாமல் இருக்க நாம் நம் நண்பர்களுக்கு அளவற்ற நட்பை காணிக்கையாக பகிர்வோம்.

அங்கிலத்தில் "attitude" என்று சொல்வார்கள் இல்லையா அது எனக்கு என் நண்பர்கள் தந்த நம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும், பலமும் தான் காரணம்.. நான் இதுவரை வென்றது, இனி வெள்ளபோவது அனைத்திற்கும் என் நண்பர்களை புகழ்கிறேன். எனக்கு இந்த வெற்றி பாதைகளை கட்டிய என் இறைவனுக்கு நான் என்றென்றும் நன்றிக்கடமைபட்டவன்..

20 April, 2008

அழகு

இனிமையான இந்த வார்த்தை இன்று என்னை சுட்டது.
என்னை மட்டுமல்ல என்னை போன்றவர்களை பல பல ஆயிரம் ஆண்டுகளாக பாதித்தது என்று நினைக்கிறேன் அதனால் தான் கவிதை பிறந்ததோ என்றும்
கலங்குகிறேன். கவிதை - பொய், புலம்பல், எம்மாற்றுதல், நாடகம், நயவஞ்சகம் இப்படி எல்லாமும் அர்த்தம் கொள்ள நெருடுகிறது. இப்படி சில சம்பவங்களால்.

பொய் நிஜத்தின் எதிர்மறை. நிஜம் கசக்கும் நேரங்களில் பொய் உண்மையாக உருவெடுக்கிறது இல்லை நிஜமாக்க படுகிறது. நான் ஏன் பொய் சொல்லவேண்டு என்று எல்லா புத்தண்டுகள் போதும் நினைபதுண்டு இந்த ஆண்டில் அதை கொஞ்சம் கடைபிடித்தேன் எல்லா நேரங்களில் இல்லை என்றாலும் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன் செய்துக்கொண்டு இருக்கிறேன். இன்று என்னுடைய வார்த்தைகள் மெய்யாக இல்லை
என்றாலும் அது என் தோழியை காயப்பதுடியது . :(
அழகு - இதன் அர்த்தம் தேடினேன்.. என் ஞானத்தில் இல்லை வலைத்தளத்தில் தான்.. கிடைத்தது நான் சொல்வதை விட நீங்களே பார்த்தால் நல்லது.. நாமாக உணரும் ஒன்று நிச்சயமாக நமக்கு பிடிக்கும்.. அதுவும் நம் சிந்தனைக்கு என்ற வாறு நம்முள் ஊடுருவும்.. தேடுங்கள் 'அழகு' (ஆங்கிலதில்)..
சரி என்னுடைய விஷயத்துக்கு வருகிறேன் நான் 'அழகு' என்னும் சொல்லில் புரிந்து கொண்டது அர்த்தம் - நிஜம், உண்மை, தூய்மை, ஆனந்தம், காதல், அன்பு.. வேற என்னக்கு தெரியல.. ஒரு பழமொழி உள்ளது 'அழகு பார்பவர்களின் கண்களில் உள்ளது என்று'.. இந்த பழமொழி இன்று தான் எனக்கு உணர்த்து.

நமக்கு பிடித்தவர்கள் எல்லோரும் அழகாக தான் இருப்பார்கள்.. நமக்கு பிடித்தவர்கள் பிறர்ருக்கு பிடிக்காமல் போகலாம்.. எல்லாரும் விரும்ப கூடிய அழகு யாருக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.. அதனால் தான் நாம் நம்முள் பல பிரிவுகளாக இருக்கின்றோம்.. நான் சொல்லும் பிரிவினைகள் அனைத்தும் மனித அழகை பற்றியது வினாக இதை பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. நம்ம டாபிக் 'பிகருகளை' பற்றியது.. மற்ற எல்லா வற்றையும் எடுதுகொள்ள வேண்டாம் .. நன்றி
நம்ம மேட்டருக்கு வரேன்.. நம் நண்பர்கள் நமக்கு அழகு, எல்லாருக்கும் அவங்க வாழ்க்கை துணை அழகு (இது எல்லாருக்கும் பொருந்தாது), நம் பிள்ளைகள் அழகு, நாம் நமக்கு அழகாக தெரிந்தால் இந்த வாழ்க்கையே அழகு தான்.. எல்லாரும் அழகாக தான் தெரிவார்கள்.. வாழ்கையில் வென்றவர்கள்
எல்லோரையும் தங்களை நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசித்தனர் , அன்பை பகிர்துகொண்டனர், பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வும் கண்டனர், வாழ்வில் வென்றனர்.. வென்றவர்கள் சிலர் அன்னை தெரேசா, காந்தி, மார்ட்டின் லூதர் கிங், முயன்றால் நாளை நானும் நீங்களும்.. :)

பிரச்சனை என்ன வென்றால் நான் என் தோழியிடம் நீ சுமாராதான் இருக்கிறாய் என்று சொன்னதுதான்.. பெண்களிடம் சொல்ல கூடாதது சரி நம்ம பிரிஎண்டு தான்ன்னு சொல்லிடேன்.. நம்ம பிரிஎண்டு, நமக்கு புடுச்ச பொண்ணு அவகிட்ட இப்படி சொன்னதுனால கொஞ்சம் பீல் பண்ணிட்டேன்.. எல்லாம் நல்லதுக்கு தான்.. என் பிழையை திருதிகொள்ளவும், உன்னமையான நட்பை உணர்வும், எனக்கு கிடைத்த சந்தர்பம் தான் இது.. இல்லை நமக்கு கிடைத்த சந்தர்பம் தான் இது..

நம்ம வேற்றுமையுலும் ஒற்றுமை இருக்குதுன அதுக்கு காரணம் நாம் நம் நட்பில் காணும் ஆனந்தமே காரணம்.. இல்லை அழகு, உண்மை, தூய்மை, அன்பு.. சரி நம்ம என்ன வேணும்னாலும் சொல்லலாம் அதுக்கு நமக்கு ரைட்ஸ் இருக்கு.. நீங்களும் எப்படி வேணும்னாலும் சொல்லுங்க..

நமக்கு பிடிச்சதுனாலதான் நாம் ஒன்றாக ஒருக்கிறோம்.. நாம் வேறாகும் பொது நாம் ஒன்றாக இருந்ததை என்னும்வோம்.. ஒன்றாகவேய் இருப்போம்..

கடைசியா சொல்லுறது என்னன்னா.. பொண்ணுங்க கூட பேசும்போது நிதானமா பேசணும்.. இல்ல புத்திசாலித்தனமா பேசணும்.. :)

17 April, 2008

பள்ளிக்கூடம்

நான் படிச்சது அரசினர் மேல் நிலைப்பள்ளி, அனகாபுத்தூர், சென்னை - 70.
கவர்மென்ட் ஸ்கூல்.. செம மாஸ் பசங்க.. (நான் இல்லேங்க வேற பசங்க ) ஒழுங்க ச்சூல்லுக்கு போனமா பிகுற கரெக்ட் பண்ண படிசொமா.. அப்படி தான் நாங்க ஒரு குரூப் இருந்தோம்
பத்தாவது வரைக்கும் நானும் பிரசாத் ஒன்ன சுத்துவோம்.. என்னோட நல்ல பிரிஎந்து அவன்தான்.. நாங்கள ஆளுக்கு ஒரு பிகர செட் பண்ணிக்கிட்டு சைட் அடிப்போம்.. எப்படியப்பட்ட இடி மலைனால்லும் லீவ் போட மட்டோம். அவ்வோலோ சின்சியர் நாங்க.. நூறு சதவிகிதம் அட்டேண்டன்சே கிடைக்கும் கூடவே திட்டும் கிடைக்கும்.. அட்டேண்டேன்சே மட்டும் நூறு .. மார்க் மட்டும் எழுவது எம்பது..
எங்க பாவோரிடே மேடம் கேதரின் அவங்கலக்கு நானும் பிரசாத்உம் ரொம்ப இஷ்டம்.. ரூபன் தான் எங்க வில்லன் கேதரின் அடியாலு.. நாங்க சாதுஸ்.. செம அடி வங்கிஇருக்கோம் .. என்ன விட பிரசாத்kku அடி கூட விழும்..
அடி வாங்கறது இல்ல பிரச்னை பிகர் முன்னடி அடி விழும் அதுதான் வேதனை.. இதெல்லாம் எங்கள்ளுக்கு சகஜமாச்சு.. இரு வழிய பத்தாவது முடிஞ்சிது..
பிளஸ்-டு எங்க கூட மோகன் சேந்தன்.. மோகன் நல்ல படிக்குற பையந எங்க கூட சேர்றதுக்கு முன்னடி.. அப்புறம் உங்கள்ளுக்கு தெரியுமே.. கழுத கூட சேர்ந்தா குட்டி செவுருனு.. பாவம் மோகன்.. இன்னும் எங்ககூட குட்டி செவுற இருக்கான்..
டென்த் ல வேற வேற பிகர சைட் அடுச்ச நாங்க பிளஸ்-டு ல ஒரே பிகர சைட் அடுச்சோம்.. அவ தான் மோகனோட தங்கச்சி.. சொல்ல போன மோகனும் அந்த பிகர சைட் அடிச்சந அவங்க வீட்டண்ட இருந்ததுனால் அவன அண்ணன்னு இசிய சொல்லீட்ட.. மோகனும் பெருந்தன்மைய தங்கச்சியா எதுகிட்டான்..
நாங்க இப்போவும் ஒன்ன சைட் அடிப்போம் ரகள பண்ணுவோம்..

இன்னும் எங்க ஸ்கூல் க்ரூப்ல பல முக்கிய புள்ளிகள் இருக்காங்க.. அவர்களில் சிலர் பிரபு, சாதிக், ரூபன், ராஜன், கார்த்தி ( எஸ் மற்றும் எம்), கிருஷ்ணா, ஏக்நாத், பெருமாள், குள்ள ரவி,
பிளஸ்-டு புள்ளிகள்.. நரேஷ், ரவி, விஜயகுமார், கிரி, தாமஸ், சுஜித், தரபதான், சேசு, சாமுவேல், சரவணன்,
பிகுருங்க லிஸ்ட் : . . . .. (என்னில் அடங்காதது)

தொல்லைகள் இல்லாத எல்லைகள் தொட வேண்டும் பிழைஇலத நட்பு..

அடுத்து 'எங்க ஏரியா' - தாண்டி போக்தீங்க.. எல்லா விவரங்களும் வரும்..

ப்ளோக் பரிசோதனை

என்னோட உயர் அதிகாரி இன்னைக்கு எனக்கு பல அட்வைஸ்.. தம்பி நீ நம்ம கம்பெனிய ப்றேசென்ட் பண்ணுற.. ஒழுங்க தாடிய ஷேவ் பண்ணிட்டு வா.. டைம்க்கு ஆபீஸ் வரணும்.. மீட்டிங் எல்லாம் பக்காவா அட்டன் பண்ணனும்.. எல்லாத்துக்கும் பும் பும் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு.. சரி இன்னைக்கு நாந்தான் இந்த ஆளுக்கு டைம் பாஸ் போலன்னு நெனச்சிகிட்டேன்.. வேற என்ன பண்ண முடியும்.. கொஞ்சம் மொரச்சளும் நெறைய அணிய புடுங்கனும்..
ப்லோக்ள நேரம் போச்சு.. போயுகிட்டே இருக்கு.. :)

எல்லாருக்கும் வந்தனம்..

எனக்கு தமிழ் ரொம்ப நல்ல வராது அனா நான் தமிழ் நாட்ட சார்தவந்தன்தான். என்னோட மச்சனோட ப்ளோக் தான் இதுக்கெல்லாம் காரணம்..

அடியேனின் பிழைகளை பொறுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

நன்றி