05 May, 2008

தேவதையின் சாபம் - 1

ராஜா மொகைதீன் என்கிற ராஜா தனது இருபத்தி மூன்று வருடங்களையும் சென்னையில் மட்டுமே கழித்தவன். எந்த பெரிய கடமைகளும் இல்லாதவன் போல் தெரிந்தாலும் எல்லா தலை பிள்ளைக்கும் இருக்கும் பொறுப்பு இவனுக்கும் இருந்தது. தான் ஒரு சராசரி குடும்பத்தை செர்ந்தவனாலும்
தன்னை ராஜகுமரனாக பார்க்கும் பெற்றோர், தளபதியாக பார்க்கும் நண்பர்கள் என உண்மையான ராஜாவாக வளர்ந்துவந்தான். இந்த ராஜாவுக்கு வணவாசமாக பெங்களூரில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

சொல்லப்போனால் நம்மைபோல ஒருவன் :)

கனவு உலகத்தில் வாழும் இவன்னுக்கு நெரிசலான சென்னையும் பெயருக்கு ஏற்ற மாதிரி சிங்கார சென்னையாக தெரிந்தது.. உலகத்தை வெல்ல புறப்படும் போர் விரன்போல் சந்தோசமும் கவலையுமாக பெங்களூருக்கு புறப்பட்டான் நம் ராஜா.

கயல்விழி என்கிற கயல்.. சென்னை வாசித்தான் அனால் "Chennai is a dirty place" அப்படின்னு பிலிம் ஓட்டுவ.. காரணம் அவளின் உறவினர்களும்.. அவள்களின் கலாச்சாரமும்.. ரொம்ப ரொம்ப ஆச்சாரம் பார்பவர்கள்.. வேறு மத மக்களிடம் பேசுவதை கூட யோசிப்பவர்கள்.. :( [இப்படியும் பலர் இருக்கிறர்கள்]

சென்னையில் அப்பா அம்மா உறவியானர்களை விட்டு பள்ளி படிப்பை ஊட்டியிலும், கல்லூரி படிப்பை கோயம்புத்துர்ரிலும் நிறைவேற்றினால்..
பெங்களூரை சேர்ந்த ஒரு நல்ல கம்பெனியில் விரும்பிய வேலையையும் பெற்றால். தங்களுடன் இல்லாததால் அவள் குடும்பத்தில் எல்லாரும் கயல்விழிமீது மிகவும் நேசம் / பாசம் காட்டினர்.. குடும்பத்தின் பாச மழையில் நினைந்தவன்னம் பெங்களூருக்கு புறப்பட்டால் கயலும்..

தன் நண்பர்களில் அறிவுரையும், அந்த வயதுக்கே உரிதன ஆசைகளுடன் இவன் பயணம் தொடர்ந்தது..
தான் விரும்பிய வேலை, தான் விரும்பிய வாழ்க்கை என மன நிம்மதியில் இவள் பயணம் தொடர்ந்தது..


முதல் அனுபவம் எல்லோருக்கு நிச்சயமாக ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.. [புதுசா இருப்பதால் தான் அதை முதல் அனுபாவம் என்கிறார்கள்]..
புதிதான சூழ்நிலை, மனிதர்கள், ஆசைகள், ஏக்கங்கள் இவைகளுடன் வந்தவன் நண்பனின் நண்பன் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தான். ஓரிரு நாட்கள் முன்னதாக வந்தவனுக்கு வீட்டில் கால்கள் கட்டுப்படவில்லை. நகரை சுற்றிபர்க்க கிளம்பிவிட்டான்.. எம்.ஜி. ரோடு.. பெங்களூரில் மிக பெயர்போன இடம்.. முதல் முறை வருவதால் அங்கு உள்ள எல்லா கடைகளையும் சிறிது நேரம் நோட்டம் விட்டு உலாவந்தான்.. அப்படி வருகையில் ஒரு தென்றல் அவனை மட்டும் விரட்டியது.. அந்த தேவதையின் சிறகுகள் மெல்ல இவனை தழுவ இவன் முட்டும் வானில் மிதந்தான்.. தன்னை மறந்த அந்த வினாடியில் அந்த பெண்ணின் முகவரியும் தொலைத்தான்.


ஆயிரம் ஆயிரம் வண்ணங்களை கொண்டு பிரம்மாண்டமான ஓவியங்கள் நம் முன்னால் இருந்தாலும்..
சில வினாடிகள் தோன்றி மறையும் வானவில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது..
நாம் அந்த அழகை மறுமுறை காணும் வரை நீடிக்கும்..

இந்த வாரம் டிக்கெட்ஸ் [வேலை] சுலபமாக இருக்க வேண்டும் என்று வேண்டிய நண்பனுடன். அந்த பெண்ணை மறுமுறை நிச்சயமாக பார்போம் என்ற நம்பிக்கையில் ராஜாவும் வேலைக்கு புறப்பட்டான்.


****************************************************

நானும் வேலைக்கு போகணும்.. மிச்ச கற்பனைகள் முளைக்கும் பொது தொடர்வேன்.. நன்றிகளுடன்..

4 comments:

ஜி said...

ஆரம்பமே அசத்தலா இருக்குது.... தலைப்பா பாத்தா க்ளைமேக்ஸ கெஸ் பண்ண முடியுது.... பாப்போம்... என்ன நடக்குதுன்னு :))))

Riyaz Mohamed said...

உங்க அளவுக்கு என்னால் முயற்சி பண்ண முடியாது.. எதோ என்னால முடிஞ்சது.. :)

Jagadeesh said...
This comment has been removed by the author.
Jagadeesh said...

Tamil nalla varadhu nu aarambichu, tamil la pinra.. nalla irukku.. muyarchi thodarattum.. en vaalthukal..