இனிமையான இந்த வார்த்தை இன்று என்னை சுட்டது.
என்னை மட்டுமல்ல என்னை போன்றவர்களை பல பல ஆயிரம் ஆண்டுகளாக பாதித்தது என்று நினைக்கிறேன் அதனால் தான் கவிதை பிறந்ததோ என்றும்
கலங்குகிறேன். கவிதை - பொய், புலம்பல், எம்மாற்றுதல், நாடகம், நயவஞ்சகம் இப்படி எல்லாமும் அர்த்தம் கொள்ள நெருடுகிறது. இப்படி சில சம்பவங்களால்.
பொய் நிஜத்தின் எதிர்மறை. நிஜம் கசக்கும் நேரங்களில் பொய் உண்மையாக உருவெடுக்கிறது இல்லை நிஜமாக்க படுகிறது. நான் ஏன் பொய் சொல்லவேண்டு என்று எல்லா புத்தண்டுகள் போதும் நினைபதுண்டு இந்த ஆண்டில் அதை கொஞ்சம் கடைபிடித்தேன் எல்லா நேரங்களில் இல்லை என்றாலும் என்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன் செய்துக்கொண்டு இருக்கிறேன். இன்று என்னுடைய வார்த்தைகள் மெய்யாக இல்லை
என்றாலும் அது என் தோழியை காயப்பதுடியது . :(
அழகு - இதன் அர்த்தம் தேடினேன்.. என் ஞானத்தில் இல்லை வலைத்தளத்தில் தான்.. கிடைத்தது நான் சொல்வதை விட நீங்களே பார்த்தால் நல்லது.. நாமாக உணரும் ஒன்று நிச்சயமாக நமக்கு பிடிக்கும்.. அதுவும் நம் சிந்தனைக்கு என்ற வாறு நம்முள் ஊடுருவும்.. தேடுங்கள் 'அழகு' (ஆங்கிலதில்)..
சரி என்னுடைய விஷயத்துக்கு வருகிறேன் நான் 'அழகு' என்னும் சொல்லில் புரிந்து கொண்டது அர்த்தம் - நிஜம், உண்மை, தூய்மை, ஆனந்தம், காதல், அன்பு.. வேற என்னக்கு தெரியல.. ஒரு பழமொழி உள்ளது 'அழகு பார்பவர்களின் கண்களில் உள்ளது என்று'.. இந்த பழமொழி இன்று தான் எனக்கு உணர்த்து.
நமக்கு பிடித்தவர்கள் எல்லோரும் அழகாக தான் இருப்பார்கள்.. நமக்கு பிடித்தவர்கள் பிறர்ருக்கு பிடிக்காமல் போகலாம்.. எல்லாரும் விரும்ப கூடிய அழகு யாருக்கும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.. அதனால் தான் நாம் நம்முள் பல பிரிவுகளாக இருக்கின்றோம்.. நான் சொல்லும் பிரிவினைகள் அனைத்தும் மனித அழகை பற்றியது வினாக இதை பொதுவாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. நம்ம டாபிக் 'பிகருகளை' பற்றியது.. மற்ற எல்லா வற்றையும் எடுதுகொள்ள வேண்டாம் .. நன்றி
நம்ம மேட்டருக்கு வரேன்.. நம் நண்பர்கள் நமக்கு அழகு, எல்லாருக்கும் அவங்க வாழ்க்கை துணை அழகு (இது எல்லாருக்கும் பொருந்தாது), நம் பிள்ளைகள் அழகு, நாம் நமக்கு அழகாக தெரிந்தால் இந்த வாழ்க்கையே அழகு தான்.. எல்லாரும் அழகாக தான் தெரிவார்கள்.. வாழ்கையில் வென்றவர்கள்
எல்லோரையும் தங்களை நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசித்தனர் , அன்பை பகிர்துகொண்டனர், பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வும் கண்டனர், வாழ்வில் வென்றனர்.. வென்றவர்கள் சிலர் அன்னை தெரேசா, காந்தி, மார்ட்டின் லூதர் கிங், முயன்றால் நாளை நானும் நீங்களும்.. :)
பிரச்சனை என்ன வென்றால் நான் என் தோழியிடம் நீ சுமாராதான் இருக்கிறாய் என்று சொன்னதுதான்.. பெண்களிடம் சொல்ல கூடாதது சரி நம்ம பிரிஎண்டு தான்ன்னு சொல்லிடேன்.. நம்ம பிரிஎண்டு, நமக்கு புடுச்ச பொண்ணு அவகிட்ட இப்படி சொன்னதுனால கொஞ்சம் பீல் பண்ணிட்டேன்.. எல்லாம் நல்லதுக்கு தான்.. என் பிழையை திருதிகொள்ளவும், உன்னமையான நட்பை உணர்வும், எனக்கு கிடைத்த சந்தர்பம் தான் இது.. இல்லை நமக்கு கிடைத்த சந்தர்பம் தான் இது..
நம்ம வேற்றுமையுலும் ஒற்றுமை இருக்குதுன அதுக்கு காரணம் நாம் நம் நட்பில் காணும் ஆனந்தமே காரணம்.. இல்லை அழகு, உண்மை, தூய்மை, அன்பு.. சரி நம்ம என்ன வேணும்னாலும் சொல்லலாம் அதுக்கு நமக்கு ரைட்ஸ் இருக்கு.. நீங்களும் எப்படி வேணும்னாலும் சொல்லுங்க..
நமக்கு பிடிச்சதுனாலதான் நாம் ஒன்றாக ஒருக்கிறோம்.. நாம் வேறாகும் பொது நாம் ஒன்றாக இருந்ததை என்னும்வோம்.. ஒன்றாகவேய் இருப்போம்..
கடைசியா சொல்லுறது என்னன்னா.. பொண்ணுங்க கூட பேசும்போது நிதானமா பேசணும்.. இல்ல புத்திசாலித்தனமா பேசணும்.. :)
20 April, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Especially USAA kita
யாரு மேன் அந்த உஷா??? அந்த உஷாக்காகத்தான் இவ்வளவு உருகி ஒரு பதிவா???
கொஞ்சம் கீழ இருக்குற Word verificationa தூக்கி விட்டுட்டீன்னா இன்னும் நல்லா இருக்கும் :)))
பொண்ணுங்க கூட பேசும்போது நிதானமா பேசணும்.. இல்ல புத்திசாலித்தனமா பேசணும்..
Good point...so your experience has teached you a lesson :)
யாரு மேன் அந்த உஷா??? அந்த உஷாக்காகத்தான் இவ்வளவு உருகி ஒரு பதிவா???
கொஞ்சம் கீழ இருக்குற Word verificationa தூக்கி விட்டுட்டீன்னா இன்னும் நல்லா இருக்கும் :)))
- உஷா, ஒன் ஆப் தி TCS தேவதை.. :)
Post a Comment