பூக்கள் பூத்து புன்னகிப்பது இயற்கையின் அழகு..
என்னவளின் இதழோரம் பூக்கும் புன்னகை
இயற்கைக்கே அழகு..
காதலித்தேன்
காலத்தை கடத்தினேன், அவள் தேன்விழிகளை பார்க்க..
அவளும் கடந்து சென்றால்
காத்திருந்த என் காலத்தோடு..
காதல் இரு உள்ளங்கள் இணைந்தது என்றால்.
எனக்காக ஒரு பெண்ணை காதலித்தேன்,
இது மெய்யானதா???
அவள் மீது கொண்ட காதலை சாரல் மழையாய் வெளிபடுதினேன்..
என் காதலை கண்டு வியந்தாள்..
வியந்தவள் சிலிர்க்கும் முன் சாதி எனும் கருப்பு குடையை தோன்றியது..
தன் ஆசையையும், காதலையும், கண்களையும் குடைக்குள் மறைத்தாள்..
நான் புயலாகாமல் இருந்தேன்..
அந்த தேவதை!!
என் காதலை உணராமல் எல்லைகளை கடந்துவிட்டால்..
இன்று நான் கண்ணீர் மழையில்.. புன்னகையுடன் அவளுக்காக..
2 comments:
ஆஹா.. கவித கவித...
இரண்டாவது பத்தி ரொம்ப நல்லா இருந்தது....
கவிதைய படிக்கிற அளவுக்கும் பாராட்டுற அளவுக்கும் நமக்கு ஞானம் பத்தாது... ஸோ.... வாழ்த்துக்கள் மட்டும் :)))
enna riyaz ithelam?? nallathane irundha enna achu unaku
Post a Comment