வாலி என்ற சிறுவன் சின்ன கற்கண்டு என்கிற கிராமத்தில் அவன் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்தன்.. படிப்பில் ஆர்வம் அதிகம் நம்மாபயலுக்கு..
ஐந்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ஆண்டியப்பன் பெரும் கோவக்காரர்.. எல்லா மாணவர்களும் பொறுப்புடனும் நேர்மையுடனும் இருக்கவேண்டும் என்பதில் பெரும் தீர்மானத்துடன் இருந்தார்..
எல்லா பாடங்களிலும் வாலி கெட்டிக்காரன்.. அணைத்து வாத்தியார்களுக்கும் அவணை பிடிக்கும்.. பொய், பெருமை இல்லாத பய நம்ம வாலி..
அந்த ஆண்டின் இறுதி பரிட்சைகள் முடிந்தப்பின் பசங்க வாத்தியார்களுக்கு நன்றி தெரிவிக்க போனார்கள்.. அப்போ ஆண்டியப்பன் வாத்தியார் பசங்கக்கிட்ட ஒரு கேள்வி கேட்டார்..
பசங்களா நீங்க படுச்சு பெரியா ஆளானப்பிறகு என்ன ஆக போறீங்க??
பசங்க எல்லாம் நான் Doctor, Engineer, Scientist, Astronaut, IAS அப்படின்னு பெரிய லிச்ட் போட்டனுங்க.. ஆனா நம்ம வாலி ஒரு நிமிஷம் மௌனமா இருந்து நான் என்னோட தாத்தா மாதிரி Farmer ஆகபோறேன் என்றான்..
அனைவரும் அசந்துபோனர்கள்.. ஏன்டா கண்ணா விவசாயம் செய்யருது அவ்வளவு பிடிக்குமா உனக்கு என்றார் ஆண்டியப்பன்??
இல்ல ஐயா, நான் வழந்து வரகாலத்துக்கு யாரும் விவசாயம் பண்ண மாட்டாங்க, அப்போ விவசாயம் பண்ணி உற்பத்தி பண்ண நல்ல லாபம் கிடைக்கும் இல்லையா??
புன்னகையுடன் புறப்பட்டான் வாலி.. :-)