03 May, 2008

செவிச் செல்வம்

வெள்ளி, இந்த பூமியின் எல்லா சந்தோசங்களையும் நான் முழுமையாக அனுபவிக்கும் சுதந்திரம் பிறக்கும் நாள்.. அந்த வாரத்தின் கம்பெனி வேலைகள் அனைத்தையும் மூட்டை கட்டும் நாள்.. மனம் தன் இஷ்டப்படி செயலாற்றும் நாள் இந்த பொன்னால் தான்..

இந்த வெள்ளி நான் கற்றது.. இல்லை நான் கற்றதை பதித்தது எனலாம்.. நாம் எல்லோரும் நம் நண்பர்களுடன் நீண்ட நேரம் நம்மை பற்றியே பேசிக்களிப்போம் .. இங்கு நாம் மணிக்கணக்கில் நம்மை பற்றியும், நம்
சுற்றத்தார்களை பற்றியும் தான் அதிகமாக பேசுவோம்..

என்னுடன் பணியாற்றுபவர் "TOTO".. நாங்கள் இது வரை எங்கள் வேலைக்கும் ஈடுபாடு இல்லாத எந்த விஷத்தையையும் பேசியது இல்லை.. கடுமையான வேலைகள் சற்று ஓய்ந்து இருந்ததால்.. கணினியின் கரைகளை தாண்டி நண்பர்களின் தீவில் சற்று இளைபாறினேன்.. என் செவிகள் அவர்களின் உள்ளுணர்வுகளை கைப்பற்றியது.. என் மரியாதைக்கு உரிய "TOTO".. நான் மிக அதிகமாக போற்றும் மனிதர்களில் ஒருவராக உயர்ந்தார்..

நான் இதுவரை என்னுடைய பார்வையில் மற்றவர்களை கணக்கிட்டேன்.. அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்தேன்.. நாம் சுயநலவாதிகள் தான்.. எப்போதும் எதிர்பர்த்துகொண்டு இருக்கிறோம்.. இப்போது கூட பாருங்கள் நான் என் பார்வையில் எல்லோரும் சுயனலவதிகள் என்கிறேன்.. இது நான் இதுவரை செய்த பிழை.. என்ன செய்ய இவை அனைத்தும் என் எண்ணத்தில் அழமாக உடுரிவியவை.. சல இல்லை பல நாட்கள் ஆகும் இத்தகைய பண்பட்ட விதிமுறைகளை மாற்றுவதற்கு.. நான் இன்றில் இருந்து முயற்சிக்கிறேன் மற்றவர்களின் எண்ணங்களை கேட்பதற்கும் உணர்வதற்கும்..

சற்று என் சரித்திரத்தை புரட்டினேன்.. நானும் சில நேரங்களில் என் சுற்றத்தாரின் உணர்வுகளுக்கு சற்றி செவி தாழ்த்தி இருக்கிறேன்.. அதனால் தான் என்னவோ பல நல்ல நண்பர்களும், சில அழகான உறவுகளும் எனக்கு வரமானதாக பெருமைகொள்கிறேன்.. அந்த சில தருணங்களை என் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டுகிறேன்..

இவை செல்வங்கள் அல்ல வரங்கள்.. மனிதனை மனிதனாக்கும் வரங்கள்.. வரமளித்தவனுக்கே எல்லா புகழும்..

3 comments:

ஜி said...

Nice One.... You have got lots of improvement.. Keep it up :)))

Riyaz Mohamed said...

thank you..

Riyaz Mohamed said...
This comment has been removed by the author.