வானின் ஒற்றை நிலவை கண்டேன்..
அளவில்லா அழகுடன் மிதந்த ஜோதி
மனதில் எழுப்பிய முதல் ஒளி
உன்முகம் தான் அன்பே..
நீ இல்லாமல் முழு நிலவும் இருண்டதடி,
நாம் எண்ணுவது எல்லாம் இடேற இறைவனை வேண்டுவோம்.
வானின் ஒற்றை நிலவை கண்டேன்..
அளவில்லா அழகுடன் மிதந்த ஜோதி
மனதில் எழுப்பிய முதல் ஒளி
உன்முகம் தான் அன்பே..
நீ இல்லாமல் முழு நிலவும் இருண்டதடி,
அன்பு, ஆனந்தம், ஆக்ரோஷம்,
காதல், காவியம், கனவு ஆகிய அனைத்தையும் கதையாக சொல்லும் சினிமா இன்றைய அறிவியல் உலகத்திலும் ஆரோக்யமாக இருக்கிறது என்பது எதார்த்தம்.
நான் அதிகமாக என் நேரத்தை வீனக்குவது இந்த வீணாப்போன சினிமாவால்தான். எனக்கு காதல், அதிரடி, காமெடி மற்றும் விஞ்ஞான ரீதியான படங்கள் ரொம்ப இஷ்டம். நான் மட்டுமல்ல எல்லாருக்கும் இஷ்டம் என்பதால் தான் இந்த நான்கில் ஒன்றாவது திரைப்படத்தின் கருவாக வைக்கப்பட்டுள்ளது.
நம் நிஜ வாழ்வில் நடப்பதை.. இல்லை நடக்கும் என்று நம்புவதை.. உரு கொடுத்து.. வண்ணம் பூசி, வாசம் தூவி, சீவி சிங்காரித்து ஒரு கலவையாக்கி அதற்க்கும் மெருகேற்றி அழகுபடுத்தி.. நமக்கு படைக்கிறார்கள்..கழுதை போன்ற நம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அலங்கரித்து பட்டத்து குதிரையாக தொற்றுவிக்கிறார்கள்.
நம் கனவுகள் நம் முன்னால் தொகை விரித்து ஆடும் அழகை பார்ப்பது விந்தை இல்லை எதார்த்தம் தான். இசையை விருந்தாக கொண்ட படங்கள் பல நம் நெஞ்சை கொல்லையடித்திருக்கும். ரஹ்மான் கோடி கோடி ரசிகர்கள் கொண்டான் அவன் இசை கொண்ட வசையால்.
சமிப காலமாக நான் மிகவும் விரும்பி பார்ப்பது
காதலன் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள்,
நாயகி நாயகன் மீது காதல் வசப்படும்போது,
நாயகன் நாயகி காதல் வெல்ல சூழ்நிலைகள் உதவும் கட்சிகள்..
இதை எல்லாம் பெருமூச்சு விட்டு பார்க்கிறேன்.. இதிலெல்லாம் நான் என் நிஜ வாழ்வில் தோற்றது, இழந்தது.. என் காதல் கதை சொல்ல ஆசை தான் என்ன செய்ய என் காதல் நிஜமானதால் மலரும் நினைவுகள் சில கசப்பான சம்பவங்கள் பல..
காமெடியன் அடி வாங்கன சிரிப்பது, ஹீரோ அடி வாங்கன பீல் பண்ணுவது.. இதுக்கெல்லாம் என்ன காரணம்.. நம்மள ஹீரோவாவும்.. ஜாலியா இருக்கற நண்பர்கள காமெடியனாகவும் நினைக்கறதுதான்.. நிஜம் என்னன்னா யாரு அடி வாங்கினாலும் நாம பரிதாப படுவோம்.. ஆனா கதைல அடி வாங்கறத காமெடிய எடுத்துக்குறோம்.. இது போதுமே நிஜத்தையும் நிழலையும் பிரித்து காட்ட.. இது எத்தனை பேருக்கு பொருந்தும்னு தெரியல..
என்னக்கு பிடித்த சில பாடல்கள்/கட்சிகள் சில கீழே
நன்றி